Editorial / 2021 நவம்பர் 22 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

புத்தசாசனத்திற்கு தனது பிள்ளைகளை அர்ப்பணித்த பெற்றோர்களுக்காக வீடுகளை நிர்மாணிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட 'மிஹிந்து நிவஹன' திட்டத்தின் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் தேசிய விழா கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்தவின் தலைமையில் புராதன வனவாச குடா விஹாரையில் நேற்று (21) நடைபெற்றது.
இங்கு வண. கட்டுவெவே பியனந்த தேரரின் பெற்றோரின் சார்பில் அம்பாந்தோட்டை, வீரகெட்டிய, வீரகெட்டிய கிழக்கு (கட்டுவௌ) பிரதேசங்களில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய வீட்டிற்கான அடிக்கல் நடும் வைபவம் அமைச்சர் இந்திக அனுருத்தவின் பங்களிப்புடன் நடைபெற்றது.
'மிஹிந்து நிவஹன' திட்டம் ஹாம்பாந்தோட்டை மாவட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட 124 பௌத்த துறவிகளின் பெற்றோர்களுக்கு வீடமைப்புத் திட்டத்திற்கான காசோலைகள் வழங்கும் வைபவம் இங்கு பிரதானமாக இடம் பெற்றது.





14 minute ago
25 minute ago
32 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
25 minute ago
32 minute ago
51 minute ago