2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

மீனவர் தினத்தை முன்னிட்டு துவிச்சக்கர வண்டி ஊர்தி பவனி

Freelancer   / 2023 நவம்பர் 21 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

சர்வதேச மீனவர் தினத்தினை முன்னிட்டு கவனயீர்ப்பு ஊர்வலமொன்று இன்று (21) முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டது.

ஆரோக்கியமான கடல் சுற்றுச்சூழல் அமைப்புக்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தல் மற்றும் உலகில் நிலையான மீன் வளங்களை உறுதி செய்தல் எனும் தொனிப்பொருளில் சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற துவிச்சக்கரவண்டி கவனயீர்ப்பு ஊர்வலமானது சிலாவத்தை சந்தியில் இருந்து ஆரம்பமாகி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வந்தடைந்து நிறைவு பெற்றது.

குறித்த ஊர்வலத்தில் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் வகையில் பதாகைகளை ஏந்தியிருந்தனர்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X