2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

முன்னாள் பிரதியமைச்சரின் வாகனம் விபத்தில் சிக்கியது...

Editorial   / 2020 ஏப்ரல் 28 , பி.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு - அரசடி பிரதான வீதிச் சுற்று வட்டத்தின் முன்னாலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மதிலை உடைத்துக்கொண்டு, காரொன்று உட்புகுந்த விபத்தை ஏற்படுத்தியதில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் நடைபெற்ற கொரோனா வைரஸ் செயலணி கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டு, கல்முனை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவின் காரே இவ்விதம் நேற்று (27) விபத்தில் சிக்கியது.

இதன்போது, காரில் பயணித்த முன்னாள் பிரதியமைச்சரும் அவரது மகளும் எவ்வித காயங்களும் இன்றி தப்பியுள்ளனர்.

(படங்கள் - பாறுக் ஷிஹான், ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா, கனகராசா சரவணன், க.விஜயரெத்தினம்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .