2025 மே 16, வெள்ளிக்கிழமை

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மீண்டும் திறப்பு

Editorial   / 2021 ஏப்ரல் 23 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். றொசாந்த்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்பட்டு இன்றைய தினம் (23) திறந்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதி இரவு, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது.

இதையடுத்து மாணவர்கள், தமிழ் உணர்வாளர்கள் அரசியல் தலைவர்கள் கண்டனம் வெளியிட்டதோடு பல்கலைக்கழக மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் குதித்தனர்.

மாணவர்களின் கடும் அழுத்தத்தை அடுத்து மீண்டும் நினைவுத் தூபியை அதே இடத்தில் அமைப்பதற்கு முன்வந்த பல்கலை நிர்வாகம் கடந்த ஜனவரி 11ஆம் திகதி காலை துனைவேந்தரால் அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்நிலையில் நினைவுத் தூபி கட்டுமானம் நிறைவுக்கு வந்த நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

அதேவேளை இன்றைய தினம் தூபி திறந்து வைக்கப்படவிருந்த நிலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு  துனைவேந்தர் மாரடைப்பு காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவர், வைத்திய நிபுணர்களின் கண்காணிப்பின் கீழ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .