2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

மூதூரில் ஆர்ப்பாட்டம்...

Freelancer   / 2023 நவம்பர் 20 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

மூதூர் - தங்கநகர் சண்பக வித்தியாலயத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களும், பெற்றோர்களும் பாடசாலைக்கு முன்பாக இன்று திங்கட்கிழமை (20) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பாடசாலையின் விஞ்ஞானம், ஆங்கிலப் பாடங்களுக்கான இரண்டு ஆசிரியர்கள் வேறு பாடசாலைக்கு இணைப்புச் செய்யப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அவர்களை மீண்டும் தமது பாடசாலைக்கே இணைத்து தருமாறு தெரிவித்து இவ்வாறு கவனயீர்ப்பு ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.


ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களும் மாணவர்களும் பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தங்கநகர் சண்பகவல்லி வித்தியாலயத்தில் தற்போது 150 மாணவர்கள் உள்ளனர்.09 ஆசிரியர்கள் கடமையாற்றுவதோடு இதில் இரண்டு ஆசிரியர்கள் வேறு பாடசாலைகளுக்கு இணைப்புச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதனையடுத்து குறித்த இடத்துக்கு மூதூர் வலைய கல்வி பணிப்பாளர்  முனவ்வறா நளீம் வருகை தந்து பெற்றோர்களிடம் கலந்துரையாடி வாரத்தில் மூன்று நாட்கள் இடமாற்றப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் இணைப்புச் செய்வதாகவும், க.பொ.த சாதாரணதரப் பரீட்சை முடிவடைந்த பின்னர் மீண்டும் நிரந்தரமாக நியமித்துத்தருவதாக வாக்குறுதி வழங்கியதையடுத்து ஆர்ப்பாட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    M

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X