Editorial / 2025 ஏப்ரல் 01 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

முதலாவது இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான பெண் உட்பட இன்னும் முன்னணியிலுள்ள பெண்களைக் கௌரவித்து பாராட்டும் நிகழ்வு மூதூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
“நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக – வலுவான பெண் வழித்தடமாக இருப்பாள்" எனும் இவ்வருடம் சர்வதேச மகளிர் தின தொனிப் பொருளில் அமைந்த இந்த இந்நிகழ்வில் பல்வேறு சவால்களை எதிர் கொண்டு கல்வி, பொருளாதாரம், தொழில் முனைவு உள்ளிட்ட பல்வேறு வாழ்வியல் அம்சங்களில் முன்னிலை வகிக்கும் பெண்கள் கௌரவித்து பாராட்டப் பட்டார்கள்.
இதில் மூதூர் பிரதேசத்தில் முதலாவது பெண் இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எப். றொசானா, பிரதேச மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் என். சிபாதாபானு, மகளிர் அபிவிருத்தி வெளிக்கள உதவியாளர் சியாமா பஹி உள்ளிட்ட 18 முன்னிலைப் பெண்கள் கௌரவிக்கப்பட்டு அவர்களுக்கு பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளால் சான்றிதழ்களும் நினைவுச் சின்னங்களும் பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வுகளுக்கு இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனமும் வீ எபெக்ட் நிறுவனத்தின் ஆதரவுடன் நிதி அனுசரணை வழங்கியிருந்தது.
நிகழ்வில் மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம். முபாறக், பிரதேச செயலக அனைத்து பிரிவு அலுவலர்கள், மூதூர் மற்றும் சம்பூர் பொலிஸ் பெண்கள் சிறுவர் பிரிவு உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள், மகளிர் அபிவிருத்தி அலுவலர்கள், அரச, அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள், கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள், யுவதிகள், சமூக மட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் தங்கராஜா திலீப்குமார் உட்பட இன்னும் பலர் பங்குபற்றினர்.
ஏ.எச்.ஏ. ஹுஸைன்









23 Oct 2025
23 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Oct 2025
23 Oct 2025