2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மூன்று மரம் அரியும் ஆலைகள் எரிந்து நாசம்...

Editorial   / 2022 ஒக்டோபர் 13 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பெரியநீலாவணையில் உள்ள மரம் அரியும் ஆலையில் இன்று (13) அதிகாலை 1 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக அருகருகே உள்ள மூன்று மரம் அரியும் ஆலைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

சம்பவத்தை அறிந்து ஸ்தலத்திற்கு வருகை தந்த இளைஞர்கள் மற்றும் கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் ஒன்றிணைந்து மேலும் தீ பரவுவதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பெரியநீலாவணை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

இந்தத் தீ விபத்து காரணமாக பல லட்சம் ரூபாய் பெறுமதியான மரம் அரியும் கனரக மோட்டார் இயந்திரங்கள் உட்பட தொழிற்சாலையில் இருந்த மரக்குற்றிகள் மற்றும் மரத் தளபாடங்கள் என அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (.எல்.எம்.ஷினாஸ்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X