2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

மெட்ரோபொலிட்டன் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

Mayu   / 2024 மார்ச் 14 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெட்ரோபொலிட்டன் கல்லூரியின் பட்டமளிப்பு விழா கடந்த 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மெட்ரோபொலிட்டன் கல்லூரியின் தவிசாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் கொழும்பு தாமரைத்தடாக மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் மிகவும் பிரமாண்டமான முறையில் இடம்பெற்றது.

இந்த பட்டமளிப்பு விழாவில் பல்வேறு துறைசார் கற்கை நெறிகள், டிப்ளோமா, உயர் டிப்ளோமா, இளங்கலை, முதுகலை என தமது கல்வி செயற்பாடுகளை பூர்த்தி செய்த 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமக்கான சான்றிதழ்களையும்  பட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

இந்நிகழ்வில், கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரன,கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் மற்று முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப்ஹக்கீம் பாராளுமன்ற உறுப்பினர் ஜி.எல். பீரிஸ் இவர்களோடு வெளிநாட்டு தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், கல்வியியலாளர்கள் என பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

மேலும், சவுதி அரேபியா, பிரான்ஸ் ,நேபாளம் கனடா, பங்களாதேஷ், துருக்கி, மற்றும் அமெரிக்காவின் கிரைன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் இஸ்மத் இஸ்நியல் மற்றும் இப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி அப்ரா சிராஜ் டாக்டர் ரபீக்  உள்ளிட்ட விசேட அதிதிகளும் கலந்து கொண்டனர்.

இப்பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய மெட்ரோபொலிட்டன் கல்லூரியின் தவிசாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப், 
மெட்ரோபொலிடன் கல்லூரி இலங்கையில் 24 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வருகிறது.

நாட்டில் தனியார் உயர்கல்விக்கான சந்தையில் முன்னணியில் உள்ள எமது கல்லூரியில் தற்போது பல்வேறு பாடநெறிகள் உட்பட முகாமைத்துவம், உளவியல், சமூக அறிவியல், பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடப் பிரிவுகளில் டிப்ளமோ முதல் முதுகலை வரை கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறன.

சர்வதேச தரத்திற்கமைவாக எமது கல்லூரியின் சகல செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

அத்தோடு பல வெளிநாட்டுப் பல்கலைகழகங்களுடன் வலுவான கூட்டாண்மையினை கொண்டுள்ளதுடன் சிறப்பான கற்பித்தல் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.  

மெட்ரோபொலிட்டன் கல்லூரியில் சிறந்த முறையில்  கட்டமைக்கப்பட்டுள்ளதுடன் கல்விப் பீடங்களில் மாணவர்கள் , சிறந்த  கற்றல் அனுபவத்தையும் பெற்றுக்கொள்ளலாம் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .