2025 மே 14, புதன்கிழமை

யாழில் சுதந்திர தினம்…

Editorial   / 2022 பெப்ரவரி 04 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள், யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (04) தினம் இடம்பெற்றது.

 யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்,  காலை 8.19 மணியளவில்   தேசிய கொடி ஏற்றி வைத்தார். அதன் பின்னர், தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.

"சவால்களை முறியடிக்கும் நாளை" எனும் தொனிப்பொருளில் மாவட்ட அரசாங்க அதிபரின் சுதந்திர தின உரை இடம்பெற்றதுடன், உத்தியோகத்தர்களுக்கு மர கன்றுகளும் வழங்கப்பட்டன.

தன்பின்னர், மாவட்ட செயலக வளாதத்தினுள் மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எஸ்.முரளிதரன், மதகுருமார்கள்,  மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக  ஊழியர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (நிதர்சன் வினோத்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .