2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

லங்கா தீபவுக்கு 18ஆவது ஆண்டாக விருது

Editorial   / 2024 மார்ச் 20 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLIM-KANTAR Peoples Award 2024’ இல், எமது சகோதர பத்திரிகைகளான டெய்லி லங்காதீப மற்றும் ஞாயிறு லங்காதீப ஆகியவை தொடர்ந்து 18 ஆவது ஆண்டாக ‘மிகவும் பிரபலமான செய்தித்தாள்’ விருதை வென்றன.

இந்த விருது வழங்கும் விழா இலங்கையின் கந்தருடன் இணைந்து இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் (SLIM) ஏற்பாடு செய்திருந்தது. ஞாயிறு லங்காதீப பத்திரிகையின் பிரதம ஆசிரியர் காஞ்சன தசநாயக்க இந்த விருதை பெற்றுக் கொள்கிறார்.

இந்நிகழ்வில் டெய்லி லங்காதீப பத்திரிகையின் ஆசிரியர் அஜந்த குமார அகலகட, விஜய குழுமத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி ஜனக ரத்னகுமார மற்றும் விஜய பத்திரிகைகளின் பல்வேறு பிரிவுத் தலைவர்கள் காணப்படுகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .