2024 மே 02, வியாழக்கிழமை

வந்தது வசந்த காலம்...

Mayu   / 2024 ஏப்ரல் 01 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக நிருபர்கள் 

நுவரெலியாவில் ஏப்ரல் மாதத்தில் ஒவ்வொரு வருடமும்  நடத்தப்படும் வசந்த கால நிகழ்வுகள் 2024ஆம் ஆண்டுக்கான விழா, நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் நுவரெலியா மத்திய சந்தைக்கு முன்பாக மிகவும் கோலாகாலமாக  திங்கட்கிழமை (01)   ஆரம்பித்துவைக்கப்பட்டன.

வழக்கம் போல் நுவரெலியா நகரில் உள்ள பாடசாலை மாணவர்களின் பேன்ட் வாத்திய இசை நிகழ்ச்சியுடன் இந்த வசந்த கால நிகழ்வுகள் ஆரம்பமாகின. இம்மாதம் 30 ஆம் திகதி வரை வசந்தகால கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளன.

நுவரெலியா மாநகர சபை ஏற்பாட்டில் நுவரெலியா மாநகர சபை விசேட ஆணையாளர் திருமதி சுஜீவ போதிமான தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் இம் மாதம் முழுவதும்  பல்வேறு பாரம்பரிய நிகழ்வுகள் போட்டிகள் என்பன ஏற்பாடாகியுள்ளன.

மலர் கண்காட்சி, படகோட்டம், கார் பந்தய ஓட்டப் போட்டி, குதிரைப்பந்தயம், கிரிக்கெட் சுற்றுப் போட்டி, உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி, கிறகரி வாவியில் நீர் விளையாட்டு, சேற்றில் மோட்டார் ஓட்டம், மோட்டார் சைக்கிள் தடைதாண்டல் போட்டி மற்றும் நாள்தோறும் இசை நிகழ்ச்சிகள் என களியாட்ட விழாக்களும் இந்த வசந்த கால விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .