2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

வெள்ள அனர்த்தம்...

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 27 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் நுவரெலியா கந்தப்பளை - ஹைபொரஸ்ட் இலக்கம் 03 பகுதியில் சனிக்கிழமை (26) மாலை ஏற்பட்ட வெள்ள நீர் பரவலால் பிரதான வீதிகள் மற்றும் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது.

இதனால் போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர் அத்துடன் பொது மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் கடந்த சில தினங்களாக பிற்பகல் நேரத்தில் பெய்து வரும் மழை காரணமாக  தாழ்நிலப் பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்பட்ட போதிலும் சனிக்கிழமை (26) பெய்த மழை காரணமாக தாழ்நிலைப் பிரதேசங்களில் போக்குவரத்தும் முற்றாக  பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிகமான விவசாய நிலங்கள்  வெள்ளத்தில் மூழ்கியுள்ளதனால் விவசாயிகள் பெரும் கவலை தெரிவிக்கின்றனர்.

செ.திவாகரன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .