2025 மே 15, வியாழக்கிழமை

விபுலானந்தரின் திருவுருவச் சிலை…

Editorial   / 2021 மே 22 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ஜெயஸ்ரீராம்

மட்டக்களப்பு வாழைச்சேனை சுற்று வளைவு சந்தியில், சுவாமி விபுலானந்தரின் திருவுருவச் சிலை,  இராஜங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனினால் வைபவ ரீதியாக 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை  திறந்து வைக்கப்பட்டது. 

நீண்டகால பிரதேச மக்களின் கனவு நனவாக்கப்பட்டதாக மக்கள் புகழாரம் செய்தனர்.

முத்தமிழ் வித்தகரும் தமிழ் பண்டிதருமான சுவாமி விபுலானந்தருக்கு மலர் மாலை அணிவித்தும் அவரது புகழ் பாடியும் இந் நிகழ்வு நடைபெற்றது.

“சுவாமி விபுலானந்தர் உலகப் புகழ் பெற்ற ஒரு தமிழ் பெரியார், கிழக்கு மண் ஈன்றெடுத்த  இயல்,இசை ,நாடகம் என்ற முத்தமிழும் கைவரப் பெற்ற முத்தமிழ் வித்தகர் ஆவர்” என இராஜங்க அமைச்சர் தமது உரையில் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .