2025 ஜூலை 21, திங்கட்கிழமை

வீதியைப் புனரமைக்குமாறு கோரிக்கை

Editorial   / 2018 ஜூலை 26 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

பொகவந்தலாவ நகர வீதியானது, குன்றும் குழியுமாகக் காணப்படுவதால், அவ்வீதி வழியாகப் போக்குவரத்துச் செய்வதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக, பயணிகள் தெரிவிக்கின்றனர்.

பொகவந்தலாவ பிரதேசத்தில், சுமார் 20 தோட்டங்கள் காணப்படுவதோடு, இந்தத் தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு, பொகவந்தலாவ நகரமே பிரதான நகரகமாகக் காணப்படுவதால், தமது தேவைகளுக்காக நகருக்கு வந்து செல்லும் மக்கள், பாரிய சிரமங்களுக்கு மத்தியிலேயே வீடு திரும்புகின்றனர் என, அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

பிரதான பாதையில் காணப்படும் குழிகள் காரணமாக, வாகன சாரதிகளும் பாதிப்படைந்துள்ளனர்.

எனவே, இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று, பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X