Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2025 மே 13 , மு.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு, ஹுணுபிட்டியவில் உள்ள கங்காராமய விகாரையும், ஜனாதிபதி செயலகமும், பிரதமர் அலுவலகமும் இணைந்து ஏற்பாடு செய்த புத்த ரஷ்மி வெசாக் வலயத்தை, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மே மாதம் 12 ஆம் திகதி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்த பிரதமர்:
" பல்வேறு இனங்களைச் சேர்ந்த கொழும்பின் அனைத்து மக்களாலும் கூட்டாகக் கொண்டாடப்படும் இந்த புத்த ரஷ்மி வெசாக் பண்டிகை தனித்துவமானது. கொழும்பு நகரின் மத சகவாழ்வு மிகவும் முக்கியமானது. இந்த சகவாழ்வின் காரணமாகவே நாம் அதிக எண்ணிக்கையிலான அன்னதான நிகழ்வுகளையும் வெசாக் வலயங்களையும் காண முடிகிறது. இந்த அன்னதான நிகழ்வுகளை நகரத்தில் உள்ள அனைவரும் தங்கள் பணத்தையும் முயற்சியையும் செலவழித்து நடத்துகிறார்கள்.
இலங்கை பௌத்த ஞானம், பௌத்த கலாசாரம் மற்றும் தேசிய தனித்துவத்தை நம் நாட்டில் உள்ள பௌத்தர்களுக்கு மட்டுமன்றி, வெளிநாடுகளில் உள்ள பௌத்தர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் வழங்க சங்கைக்குரிய கிரிந்தே அஸ்ஸஜி தேரர் மேற்கொண்டுவரும் முயற்சிகள் பாராட்டப்பட வேண்டும்.
மேலும், இந்த தருணத்தில், நேற்று கொத்மலை பகுதியில் நடந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் மிகுந்த உணர்ச்சியுடன் நினைவு கூர்கிறோம். "காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் நான் பிரார்த்திக்கிறேன்" என்றும் பிரதமர் கூறினார்.
இந்த நிகழ்வில் புத்த சாசனம், சமய மற்றும் கலாசார விவகார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, வெளிநாட்டுத் தூதுவர்கள், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதன்த்ரி மற்றும் பல விசேட விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
இதேவேளை, மகா பிரஜாபதி வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வெசாக் பந்தலின் திறப்பு விழா, மே 12 ஆம் திகதி, வெசாக் பௌர்ணமி போயா தினத்தன்று, கிராண்ட்பாஸ் பலாமரச் சந்தியில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில், பிரித் பாராயணத்திற்கு மத்தியில் நடைபெற்றது.
இந்த வெசாக் பந்தல் ஸ்ரீ வைஷாக்ய சம்புத்தாலோக சங்கத்தால் 54வது முறையாக அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 Jul 2025