Editorial / 2025 மே 21 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப சம்மேளனத்தின் ஸ்தாபகர் தின நிகழ்வு கொழும்பு 07 இல் அமைந்துள்ள ஜே. ஆர். ஜயவர்தன நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (20) பிற்பகல் இடம்பெற்றது.
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் தலைவர் ஷாம் நவாஸ் தலைமையில் நடந்த இந்நிகழ்வின் இலங்கை பாராளுமன்றத்தின் முன்னைய நாள் சபாநாயகர் தேசமான்ய கரு ஜயசூரிய பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
ஜெனீவாவுக்கான இலங்கையின் முன்னாள் வதிவிடப் பிரதிநிதியான தயான் ஜயதிலக “Unveiling Justice: How the Palestine Context Highlights Global Challenges for Institutions and Smaller Nations’ “ எனும் தொனிப்பொருளில் இந்நிகழ்வின் சிறப்புரையை நிகழ்த்தினார்.
முன்னாள் சபாநாயகர் மர்ஹூம் எம்.ஏ.பாக்கீர் மாக்கார் மீதான அனுதாப பிரேரணைகளின் தொகுப்பு இதன்போது நூலாக வெளியீட்டு வைக்கப்பட்டது.
வெளிநாட்டு இராஜதந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூகத் தலைவர்கள், புத்திஜீவிகள், கல்வியலாளர்கள்,என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஸ்தாபகர்களின் மறுமை ஈடேற்றத்துக்காக இதன்போது துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.





3 minute ago
25 minute ago
37 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
25 minute ago
37 minute ago
42 minute ago