2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

ஹர்த்தால்..

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 25 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்ப்பாட்டங்கள், டயர் எரிப்பு மற்றும் வீதிகள் மறிப்பு ஆகிய எந்தவித குழப்பமான நடவடிக்கைகளுமின்றி, வடமாகாணத்தில் தற்போது ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

கடந்த 21 ஆம் திகதி அதிகாலை கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களான கலைப்பீடத்தில் 3ஆம் வருடத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23), சுன்னாகத்தைச் சேர்ந்த பவுண்ராஜ் சுலக்ஸன் (வயது 24) ஆகிய மாணவர்கள் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவத்தைக் கண்டிக்கும் வகையில் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து, இந்த ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தன.

இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தாலில், பாடசாலைகள், வர்த்தக நிலையங்கள், தனியார் நிறுவனங்கள் என்பன மூடப்பட்டன. இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பஸ் சேவைகள் முழுமையாக செயலிழந்தன. 

வவுனியா

கிளிநொச்சி

முல்லைத்தீவு

மன்னார்

(படப்பிடிப்பு: சொர்ணகுமார் சொரூபன், எம்.றொசாந்த், சண்முகன் தவசீலன், எஸ்.றொசேரியன் லெம்பேட், ரொமேஸ் மதுசங்க)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X