2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

அவுஸ்திரேலியா மீண்டும் வெற்றி

Shanmugan Murugavel   / 2015 செப்டெம்பர் 06 , மு.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயில் இடம்பெற்று வரும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 64 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற ரீதியில் முன்னிலை பெற்றுள்ளது.

மழையால் தாமதமாகி, 49 ஓவர்களாக இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அவுஸ்திரேலிய அணி 49 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 309 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 70 ஓட்டங்களையும், மிட்செல் மார்ஷ் 31 பந்துகளில் ஏழு, நான்கு ஓட்டங்கள், மூன்று, ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 64 ஓட்டங்களையும், ஜோர்ஜ் பெய்லி 54 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக பென் ஸ்டோக்ஸ் மூன்று விக்கெட்டுக்களையும், ஸ்டீவன் பின் 2 விக்கெட்டுக்களையும், அடில் ரஷீட், மொயின் அலி தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 245 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக ஒயின் மோர்கன் 85 ஓட்டங்களையும், ஜேம்ஸ் டெய்லர் 43 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக பற் கம்மின்ஸ் 4 விக்கெட்டுக்களையும், கிளன் மக்ஸ்வெல் இரண்டு விக்கெட்டுக்களையும், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் மார்ஷ், நதன் கூல்ட்டினர்யில் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

போட்டியின் நாயகனாக மிட்செல் மார்ஷ் தெரிவானார். இரு அணிகளிடையேயேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை மன்செஸ்டரில் இடம்பெறவுள்ளது. 

இதேவேளை இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி துடுப்பெடுத்தாடும் போது ஸ்டீவன் பின் வீசிய பந்து வோணரின் கையை தாக்கியதில், இடது பெருவிரலில் முறிவு ஏற்பட்டுள்ளது எக்ஸ்ரேயில் தெரியவந்தையடுத்து, அவர் இத்தொடரிலிருந்து விலகியுள்ளதுடன், எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் இடம்பெறவுள்ள பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதும் சந்தேகத்துக்கிடமாகியுள்ளது. இவருக்கு பதிலாக காயத்திலிருந்து மீண்ட ஆரோன்  பிஞ், மிகுதி தொடருக்காக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .