2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

முதலாவது காலிறுதியில் போர்த்துக்கல்-போலந்து நாளை மோதல்

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 29 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த மாதம் 10ஆம் திகதி 24 அணிகளுடன் பிரான்ஸில் ஆரம்பித்த யூரோ 2016 கிண்ணப் போட்டிகள், இறுதி 16 அணிகளுக்கான சுற்றின் முடிவில், தற்போது எட்டு அணிகளைக் கொண்டதாக சுருங்கியுள்ளது.

அந்தவகையில், இலங்கை நேரப்படி, நாளை வெள்ளிக்கிழமை (01) அதிகாலை 12.30க்கு ஆரம்பிக்கவுள்ள போட்டியில் போர்த்துக்கல்லும் போலந்தும் மோதவுள்ளன.

இப்போட்டியில் வெற்றி பெறும் அணி, பெல்ஜியம், வேல்ஸ் ஆகிய அணிகள் விளையாடும் காலிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் அரையிறுதிப் போட்டியில் மோதவுள்ளதால், இந்தத் தொகுதியில், இறுதிப் போட்டிக்குச் செல்வது இலகுவாக காணப்படுகிறது.

மறுபக்கத்தில், ஜேர்மனி, இத்தாலி, பிரான்ஸ் ஆகிய கால்பந்தாட்ட ஜாம்பவான்களுடன் முதல்தடவையாக யூரோ கிண்ணப் போட்டிகளில் நுழைந்த ஐஸ்லாந்து காணப்படுகிறது.

கால்பந்தாட்ட உலகில் தோன்றிய மிகச் சிறந்த வீரர்களில் ஒருவரும் போர்த்துக்கல் அணியின் தலைவருமான கிறிஸ்டியானோ ரொனால்டோவே போர்த்துக்கல்லுக்கு பிரதான பலமாக காணப்பாடுகின்றார்.

தொடரின் ஆரம்பப் போட்டிகளில் அவ்வளவாக ரொனால்டோ சோபித்திருக்காத போதும், வழமையான அவரது பாணி போன்று, முக்கியம் என்று வருகின்ற போட்டிகளில், இறுதி நிமிடங்களில் கோல்களைப் பெறுகின்றமை போன்று, இறுதிக் குழுநிலைப் போட்டிகளில் இரண்டு கோல்களைப் பெற்றதுடன், இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில், அவர் உதைத்து மீண்டு வந்த பந்தே பின்னர் கோலாகியிருந்தது.

இந்நிலையில், மீண்டுமொரு ரொனால்டோவின் அதிரடி ஆட்டம் வெளிப்படுமானால், போர்த்துக்கல்லுக்கான அரையிறுதி இடமென்பது இலகுவானதாகவே இருக்கும்.

மறுபக்கம், பின்களத்தில் அனுபவவீரரான பெப்பே இருப்பது போர்த்துக்கல்லுக்கு, பின்களத்தில் உறுதி நிலையை வழங்குவதுடன், ‘கோணர் கிக்’களை தலையால் முட்டி கோலாக்கும் பெப்பேயின் திறன், போர்த்துக்கல்லுகு மேலதிக பலமாகும்.

அடுத்து, தற்போதைய உலக சம்பியன்களான ஜேர்மனிக்கு அடுத்ததாக, பின்களத்தில் பலமாக விளங்கி, ஒரு கோலை மட்டுமே தமது பக்கத்தில் போடவிட்டுள்ளது. எனினும் ரொனால்டோ எனும் சோதனை போலந்துக்கு காணப்படுகிறது.

இச்சோதனையில் போலந்து வென்றுவிட்டால், அரையிறுதி வாய்ப்பு, அவர்களுக்கு தாம்பாளத்தில் வைத்து வழங்குவதாக இருக்கும். மறுபக்கம், யூரோ கிண்ணப் போட்டிகளுக்கான தகுதிகாண் போட்டிகளில் அதிக கோல்களை பெற்றிருந்த போலந்தின் அணித்தலைவர் றொபேர்ட் லெவன்டோஸ்கி, இதுவரையில், இத்தொடரில் தனது முத்திரையைப் பதிக்காததே அவ்வணிக்கு கவலைக்குரிய விடயமாகக் காணப்படுகிறது. அவர் தனது கோல்போடும் வழக்கத்தை மீண்டும் ஏற்படுத்திக் கொண்டால், அது அணிக்கு ஆரோக்கியத்தை வழங்கும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .