2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

றியோ ஒலிம்பிக்: '2016' என்று சொன்னால் பதக்கம் பறிபோகும்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 29 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

றியோ ஒலிம்பிக் போட்டிகள், ஓகஸ்ட் 5ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள நிலையில், ஒலிம்பிக் போட்டிகளின் உத்தியோகபூர்வ அனுசனையாளர்கள் அல்லாத அனுசரனையாளர்களுக்கும் வீரர்களுக்கும், கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஜூலை 27ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்த இந்தக் கட்டுப்பாடுகள், ஓகஸ்ட் 24ஆம் திகதிவரை தொடரவுள்ளன.

இதன்படி, ஒலிம்பிக்கினால் அங்கிகரிக்கப்பட்ட அனுசணையாளர்கள் தவிர ஏனையோர், ஒலிம்பிக் சம்பந்தப்பட்ட சொற்களைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான சொற்களில் "வெற்றி", "திறமை வெளிப்பாடு", "முயற்சி", "2016" ஆகிய சொற்கள்/சொற்றொடர்களும் உள்ளடங்குகின்றன.

வீரர்களுக்கான சீருடைகளுக்கு அனுசரணை வழங்கும் நிறுவனங்கள் போன்றன, ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடும் வீரர்களை மீள்-டுவீட் செய்யவோ அல்லது போட்டிகளுக்காக வாழ்த்துவதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிகளை மீறும் வீரர்களுக்கு, பதக்கத்தைப் பறிப்பதற்கான விதி ஏற்பாடுகளும் காணப்படுகின்றன. ஆனால் பொதுவாக, உத்தியோகபூர்வ எச்சரிக்கையோடு அவர்கள் விட்டுவிடப்படுவர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .