Shanmugan Murugavel / 2015 செப்டெம்பர் 27 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லியனொல் மெஸ்ஸி, 7 தொடக்கம் 8 வாரங்களுக்குப் போட்டிகளில் பங்குபற்ற மாட்டார் என அறிவிக்கப்படுகிறது.
சனிக்கிழமை இடம்பெற்ற போட்டியில் காயமடைந்திருந்த நிலையிலேயே, 8 வாரங்கள் வரை அவரால் போட்டிகளில் பங்குபெற முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
லாஸ் பல்மாஸ் அணிக்கெதிரான இப்போட்டியில், அவருக்கு முழங்காலில் உபாதை ஏற்பட்டிருந்ததோடு 10ஆவது நிமிடத்தில் அவர் வெளியேறியிருந்தார்.
மைதானத்தை விட்டு வெளியேறிய மெஸ்ஸி, அணி அறைக்குள் வைத்துப் பரிசோதிக்கப்பட்ட பின்னர், வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.
மெஸ்ஸின் இடது முழங்காலில் உள்ளக தசைநாண்களில் கிழிவு ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாகவே அவரால் போட்டிகளில் பங்குபற்ற முடியாது போகும் என, பார்சிலோனா கழகம் அறிவித்துள்ளது.
கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு அவரால் போட்டிகளில் பங்குபற்ற முடியாது என எதிர்பார்க்கப்படுவதால், நவம்பர் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள றியல் மட்ரிட் கழகத்துக்கெதிரான போட்டியில் மெஸ்ஸி பங்குபற்ற முடியாது போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .