Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 25 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
டுபாயில் இடம்பெற்றுவரும் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டமுடிவில் தமது 2ஆவது இனிங்சில் 491 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 130 ஓட்டங்களை பெற்றுள்ளது.
தற்போது களத்தில் ஜோ ரூட் 59, ஜொனி பெயர்ஸ்டோ 6 ஓட்டங்களுடன் உள்ளனர். பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக யசீர் ஷா, இம்ரான் கான், சுல்பிகார் பாபர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை கைப்பற்றினர்.
முன்னதாக தமது 2ஆவது இனிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 354 ஓட்டங்களைப் பெற்றபோது தமது ஆட்டத்தை பாகிஸ்தான் இடைநிறுத்தியிருந்தது. இதில், யுனிஸ் கான் 118, மிஸ்பா-உல்-ஹக் 87, அசாட் ஷாஃபிக் 79 ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக ஜேம்ஸ் அன்டர்சன், மார்க் வூட் தலா 2 விக்கெட்டுக்களையும், மொயின் அலி, அடில் ரஷீத் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
முன்னதாக நேற்று இங்கிலாந்து அணி 242 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்திருந்தது. இதில், ஜோ ரூட் 88, அலஸ்ட்டீர் குக் 65, ஜொனி பெயர்ஸ்ட்டோ 46 ஓட்டங்களை பெற்றிருந்தனர்.
பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக வகாப் ரியாஸ், யசீர் ஷா தலா 4 விக்கெட்டுக்களையும், இம்ரான் கான் 2 விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தனர்.
முன்னர் பாகிஸ்தான் அணி தமது முதல் இனிங்சில் 378 ஓட்டங்களுக்கு தமது சகல விக்கெட்டுக்களையும் இழந்திருந்தது. இதில், மிஸ்பா-உல்-ஹக் 102, அசாட் ஷாஃபிக் 83, யுனிஸ் கான் 56 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.
பந்துவீச்சில் மார்க் வூட், மொயின் அலி தலா 3 விக்கெட்டுக்களையும், ஜேம்ஸ் அன்டர்சன், ஸ்டூவர்ட் புரோட், பென் ஸ்டோக்ஸ், அடில் ரஷீத் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர்.
24 minute ago
35 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
35 minute ago
49 minute ago
1 hours ago