2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

10 விக்கெட்டுகளால் வென்றது அவுஸ்திரேலியா

Editorial   / 2017 நவம்பர் 27 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில், பிறிஸ்பேணில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான முதலாவது டெஸ்டில் 10 விக்கெட்டுகளால் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

 

170 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, இன்றைய ஐந்தாம் நாளில் 10 விக்கெட்டுகள் மீதமிருக்கையில் 56 ஓட்டங்களை மாத்திரமே பெற வேண்டியிருந்தது.

அந்தவகையில், விக்கெட் இழப்பின்றி 114 ஓட்டங்களுடன் இன்றைய நாளை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி எதுவித விக்கெட்டையும் இழக்காமல் மதியநேர இடைவேளைக்கு முன்னரே வெற்றியிலக்கையடைந்தது. துடுப்பாட்டத்தில், டேவிட் வோணர் ஆட்டமிழக்காமல் 87, கமரோன் பன்குரோப்ட் ஆட்டமிழக்காமல் 82 ஓட்டங்களைப் பெற்றனர்.

ஸ்கோர் விபரம்:

நாணயச் சுழற்சி: இங்கிலாந்து

இங்கிலாந்து: 302/10 (துடுப்பாட்டம்: ஜேம்ஸ் வின்ஸ் 83, டேவிட் மலன் 56, மார்க் ஸ்டோன்மன் 53, மொயின் அலி 38 ஓட்டங்கள். பந்துவீச்சு: மிற்செல் ஸ்டார்க் 3/77, பற் கமின்ஸ் 3/85, நேதன் லையன் 2/78)

அவுஸ்திரேலியா: 328/10 (துடுப்பாட்டம்: ஸ்டீவ் ஸ்மித் ஆ.இ 141, ஷோர்ன் மார்ஷ் 51, பற் கமின்ஸ் 42 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஸ்டூவர்ட் ப்ரோட் 3/49, ஜேம்ஸ் அன்டர்சன் 2/50, மொயின் அலி 2/74)

இங்கிலாந்து: 195/10 (துடுப்பாட்டம்: ஜோ றூட் 51, ஜொனி பெயார்ஸ்டோ 42, மொயின் அலி 40 ஓட்டங்கள். பந்துவீச்சு:  ஜொஷ் ஹேசில்வூட் 3/46, மிற்செல் ஸ்டார்க் 3/51, நேதன் லையன் 3/67)

அவுஸ்திரேலியா: 173/0 (துடுப்பாட்டம்: டேவிட் வோணர் ஆ.இ 87, கமரோன் பன்குரோப்ட் ஆ.இ 82 ஓட்டங்கள்)

போட்டியின் நாயகன்: ஸ்டீவ் ஸ்மித்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .