2025 ஜூலை 12, சனிக்கிழமை

15 வயதான ஷர்துல் விஹான் வெள்ளிப் பதக்கம் வென்றார்

Editorial   / 2018 ஓகஸ்ட் 23 , பி.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தோனேஷியத் தலைநகர் ஜகார்த்தா, பலெம்பாங்கில் இடம்பெற்றுவரும் 18ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இன்று இடம்பெற்ற டபிள் ட்ரப் நிகழ்வில் இந்தியாவின் 15 வயதான ஷர்துல விஹான் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

73 புள்ளிகளைப் பெற்றே ஷர்துல் விஹாம் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்த நிலையில், தென்கொரியாவின் ஹயுன்வூட் ஷின் 74 புள்ளிகளைப் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றதுடன், கட்டாரில் ஹமட் அலி அல் மரி 53 புள்ளிகளைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தார்.

இந்நிலையில், இன்று இடம்பெற்ற பெண்களுக்கான தனிநபர் டென்னிஸ் போட்டிகளின் அரையிறுதிப் போட்டியில் சீனாவின் ஸங் ஷுவாயிடம் இரண்டு மணித்தியாலத்துக்கும் மேலாக இடம்பெற்ற போட்டியில் 4-6, 6-7 (6) என்ற நேர் செட்களில் தோல்வியடைந்த இந்தியாவின் அங்கிதா ரெய்னா வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்தார்,

இதேவேளை, வுஷூவில் நேற்று இந்திய வீரர்கள் நான்கு வெண்கலப் பதக்கங்களைப் பெற்றிருந்தனர். நயோரம் றொஷிபினி தேவி, சந்தோஷ் குமார், சூர்ய பானு பர்டப் சிங், நரேந்தர் கிரேவல் ஆகியோர் முறையே பெண்களுக்கான 60 கிலோகிராம், ஆண்களுக்கான 56 கிலோகிராம், ஆண்களுக்கான 60 கிலோகிராம், ஆண்களுக்கான 65 கிலோகிராம் பிரிவுகளின் தத்தமது அரையிறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்த நிலையிலேயே வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுக் கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .