Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2018 ஓகஸ்ட் 21 , பி.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தா, பலெம்பாங்கில் இடம்பெற்றுவரும் 18ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆண்களுக்கான 10 மீற்றர் எயார் பிஸ்டல் பிரிவில் 16 வயதான இந்தியாவின் செளரப் செளத்திரி இன்று தங்கம் வென்றார்.
240.7 புள்ளிகளைப் பெற்று, குறித்த நிகழ்வில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சாதனையோடே செளரப் செளத்திரி தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார். ஜப்பானின் டொமொயுகி மட்ஸுடா 239.7 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றதுடன், இன்னொரு இந்தியரான அபிஷேக் வர்மா 219.3 புள்ளிகளைப் பெற்று வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.
மீருட்டிலுள்ள கலினா கிராமத்திலுள்ள விவசாயியொருவரின் மகனே செளரப் செளத்திரி ஆவார்.
இதேவேளை, ஆண்களுக்கான 50 மீற்றர் றைபிள் மூன்று நிலைகள் நிகழ்வில் இந்தியாவின் சஞ்சீவ் ராஜ்புட் இன்று வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தார். 452.7 புள்ளிகளைப் பெற்றே சஞ்சீவ் ராஜ்புட் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்த நிலையில், சீனாவின் ஹூய் ஸிசெங் 453.3 புள்ளிகளைப் பெற்று தங்கப் பதக்கத்தை வென்ற நிலையில், ஜப்பானின் மட்ஸுமோட்டோ தகயுகி 441.4 புள்ளிகளைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தார்.
இந்நிலையில், இந்தியாவுக்கான இரண்டாவது தங்கப் பதக்கத்தை பெண்களுக்கான சுயாதீனமான 50 கிலோகிராம் பிரிவில் வினீஷ் பொகட் நேற்றுப் பெற்றுக் கொடுத்திருந்தார். ஜப்பாரின் யுகி இரியேயை 6-2 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றே வினீஷ் பொகட் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார்.
இதேவேளை, பெண்களுக்கான குழு ஏ கபடிப் போட்டியொன்றொல் 38-12 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியாவிடம் இன்று தோல்வியடைந்திருந்த இலங்கை, ஆண்களுக்கான குழு ஏ கபடிப் போட்டியில் பங்களாதேஷிடம் 29-25 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்திருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago