Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 12 , மு.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட்டானது ஓவல் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
இத்தொடரின் நான்காவது போட்டியை வென்று 2-1 என முன்னிலை பெற்றுள்ள அவுஸ்திரேலியா 2001ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக தக்க வைத்துள்ள நிலையில், 18 ஆண்டுகளுக்குப் பின்னர் இங்கிலாந்தில் வைத்து ஆஷஸ் தொடர் வெற்றியையும் பெற எதிர்பார்க்கின்றது.
அந்தவகையில், அவுஸ்திரேலியாவின் முனைப்புக்களை அவ்வணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்தும், பந்துவீச்சுப் பக்கம் பற் கமின்ஸ் தலைமையில் ஜொஷ் ஹேசில்வூட் உள்ளிட்டோர் முன்னெடுக்கையில் வெற்றியுடன் தொடரை முடிப்பதற்கும் பெரும்பாலாக இவர்களிலேயே அவுஸ்திரேலியா தங்கியுள்ளது.
இந்நிலையில், எதிர்கால நோக்கில் அவுஸ்திரேலியாவின் ஆரம்பத் துடுப்பாட்டவீரர்களான டேவிட் வோணர், மார்க்கஸ் ஹரிஸ் ஆகியோர் ஓட்டங்களைப் பெற வேண்டியவர்களாகக் காணப்படுகின்றனர்.
அணித்தெரிவைப் பொறுத்தவரையில் கடந்த போட்டியில் விளையாடிய அதேயணியே பெரும்பாலும் களமிறங்கக்கூடிய வாய்ப்புகள் காணப்பட்டாலும், மிற்செல் ஸ்டார்க்கை ஜேம்ஸ் பற்றின்ஸனால் பிரதியிடுவது, பற் கமின்ஸுக்கு ஓய்வு வழங்கி மைக்கல் நேஸரால் பிரதியிடுவது போன்ற தெரிவுகளும் அவுஸ்திரேலியாவுக்கு காணப்படுகின்றன.
மறுபக்கமாக ஆஷஸைக் கைப்பற்றும் வாய்ப்பைத் தவறவிட்டுள்ள இங்கிலாந்து இப்போட்டியை வென்று தொடரைச் சமப்படுத்துவதற்கு ஜோ றூட் தலைமையிலான ஜேஸன் றோய், ஜொனி பெயார்ஸ்டோ, ஜோ டென்லி, ஜொஸ் பட்லரை உள்ளடக்கிய துடுப்பாட்டவரிசையிடமிருந்து தொடர்ச்சியான பெறுபேறுகள் எதிர்பார்கப்படுகின்றன.
இதேவேளை, பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ஜேம்ஸ் அன்டர்சன் இல்லாத நிலையில் இத்தொடர் முழுவதும் இங்கிலாந்தின் பந்துவீச்சை சுமந்த ஸ்டூவர்ட் ப்ரோட், ஜொவ்ரா ஆர்ச்சரையே மீண்டுமொரு முறை இங்கிலாந்து நம்பியிருக்க வேண்டியுள்ளதுடன், பென் ஸ்டோக்ஸ் பந்துவீசமுடியாது போனால் பெரும்பாலும் ஜேஸன் றோயை பிரதியிடக்கூடிய கிறிஸ் வோக்ஸ் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago