2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்த இழுபறி முடிவுக்கு வந்தது

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 25 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கும், இலங்கை கிரிக்கெட்டுக்குமிடையில் இருந்து வந்த ஒப்பந்த இழுபறி நிலை 7 வாரங்களின் பினனர் முடிவுக்கு வந்துள்ளது. இலங்கை கிரிக்கெட் சர்வதேசக் கிரிக்கெட் சபையின் போட்டிகளின் மூலம் கிடைக்கும் வருவாயில் 10% இனையும், ஆசியக் கிரிக்கெட் சம்மேளனத்தின் போட்டிகளின் மூலம் கிடைக்கும் வருவாயில் 10% இனையும் வீரர்களுக்கு வழங்க வேண்டும் என்ற வீர்களின் கோரிக்கையை இலங்கை கிரிக்கெட் ஒத்துக்கொண்ட நிலையில் வீரர்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட சம்மதம் தெரிவித்துள்ள போதும் இன்னமும் கைச் சாத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் கிரிக்கெட் சபையின் பிரதிநிதிகளுடன் நடாத்திய பேச்சுவார்த்தையின் பின்னரே இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 10% என்பது ஆரம்ப காலத்தின் தொகையுடன் ஒப்பிடும் போது 15% இனால் குறைக்கப்பட்டுள்ளது. 2003 ஆம் ஆண்டு இந்த முறை ஆரம்பிக்கப்பட வேளையில் 25% ஆக வீரர்களுக்கு வழங்கபட்டது. வீரர்கள் 20% கேட்ட போது கிரிக்கெட் சபை முழுமையாக மறுப்பு தெரிவித்தது. பினனர் 12% வீரர்கள் கேட்ட போது கிரிக்கெட் சபை 6% தருவதாக கூறியது. இறுதியாக 10% இல் முடிவுக்கு வந்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X