2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

பயிற்றுவிப்பாளராக விருப்பம்: மார்க் ராம் பிரகாஸ்

A.P.Mathan   / 2014 மே 04 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பளராக கடமையாற்ற தான் விரும்புவதாகவ இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மார்க் ராம் பிரகாஸ் தெரிவித்துள்ளார். பகுதி நேர ஊடகவியலாளராகவும், மிடில்செக்ஸ் பிராந்திய அணியின் பகுதி நேர துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராகவும் மார்க் ராம்பிரகாஷ் கடைமையாற்றி வருகின்றார்.

அண்மையில் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் கிரஹாம் கூச் அந்தப் பதவியில் இருந்து அணித் தலைவர் அலிஸ்டியர் குக்கின் பரிந்துரையின் பேரில் நீக்கப்பட்டதையடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு மார்க்ர ராம்பிரகாஷ் இணைத்துக்கொள்ளப்பட அதிக வாய்ப்புக்கள் உள்ள நிலையிலேயே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இங்கிலாந்து பிராந்திய அணிகளுக்காக சிறப்பாக விளையாடியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 114 முதற் தர சதங்களை இவர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இவர் மிகப் பெரியளவில் சர்வதேச ரீதியில் சாதிக்கவில்லை.

இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக கடமையாற்றுவது, பயிற்றுவிப்புடன் சம்மந்தப்பட்ட அனைவரினதும் விருப்பமாக இருக்கும். இந்த பதவி எப்படியானது என தெரியாது. ஆனாலும் நான் ஆரவமாக இருக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X