2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

மாட்ரிட் மாஸ்டேர்ஸ் தொடரில் இருந்து ஜோகோவிக் விலகினார்

A.P.Mathan   / 2014 மே 05 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நொவாக் ஜோக்கோவிக், மாட்ரிட் மாஸ்டேர்ஸ் டென்னிஸ் தொடரில் இருந்து உபாதை காரணமாக விலகியுள்ளார். உலக தரப்படுத்தல்களில் இரண்டாமிடத்தில் இருக்கும் இவருக்கு வலது கையில் ஏற்பட்டுள்ள உபாதை பூரண குணமடையாத நிலையில் குறித்த தொடரில் இருந்து விலகியுள்ளார். ஏற்கெனவே மொன்டி கார்லோ தொடரின் அரை இறுதிப் போட்டியில் இந்த உபாதையுடன் விளையடி தோல்வியை சந்தித்து இருந்தார் ஜோக்கோவிக்.

தான் இந்த தொடரில் விளையாடக் கூடிய வகையில் சகல தயார்ப் படுத்தல்களையும் செய்து இருந்த போதும் முடியாமல் போய்விட்டது. ஆனாலும் ரோம் டென்னிஸ் தொடரில் விளையாடுவேன் என ஜோக்கோவிக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ரோம் டென்னிஸ் தொடர் மே மாதம் 11ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X