2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

மும்பை வங்கடேயில் ஐ.பி.எல் இறுதிப் போட்டி?

A.P.Mathan   / 2014 மே 14 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மும்பை வங்கடே மைதனத்தில் ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டியை நடத்துவதாக இருந்தால் தாங்கள் முன் வைக்கும் 15 கோரிக்கைகளையும் ஏற்றால் மாத்திரமே அதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்படும் என ஐ.பி.எல் தலைவர் ரஞ்சித் பிஸ்வால் தெரிவித்துள்ளார்.

மும்பை கிரிக்கெட் சம்மேளனம் இறுதிப் போட்டி மைதானம் மாற்றப்பட்டமை தொடர்பில் எழுத்து மூலமான தமது கண்டனத்தை தெரிவித்த அதேவேளை காரணத்தையும் கோரியிருந்தது. அதற்க்கான பதில்க் கடித்ததில் மேற்க்கண்டவாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி அனைத்து அணிகளது உரிமையாளர்களும் மைதானத்திற்குள் செல்ல அனுமதி அளிக்க வேண்டும். வாகன தரிப்பிடத்தில் 85% இடம் அதி முக்கிய பிரமுகர்கள், ஐ.பி.எல், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அதிகாரிகள் மற்றும் அணி உரிமை நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகள் ஆகியோருடைய வாகனங்களுக்கு வழங்கப்பட வேண்டும். உதவியாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும். மும்பை காவற்றுறைக்கு வழங்கப்படும் தொகையான 50 லட்சம் ரூபா குறைக்கப்பட வேண்டும். அதிகமான வசதிகள் கொண்ட பிரத்தியோக பெட்டிகள் அதிகரிக்கப்பட வேண்டும். போட்டி நடைபெறும் மைதானத்தில் அதிக விளம்பர வசதிகள் வழங்கப்பட வேண்டும். இவை அடங்கலாக 15 கோரிக்கைகளும் ஏற்க்கப்படின், வங்கடே மைதானத்தில் இந்த வருட இறுதிப் போட்டி நடைபெறும் என மும்பை கிரிக்கெட் சம்மேளனத்திற்கு ஐ.பி.எல் தலைவர் கடிதம் அனுப்பியுள்ளார்.

கடிதம் தமக்கு கிடைதுள்ளது என்பதனை உறுதி செய்துள்ள மும்பை கிரிக்கெட் சம்மேளனம், நாளை (15) உடனடிக் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், கோரப்பட்ட விடயங்களை வழங்க முடியுமா இல்லையா என்பதை கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த வங்கடே மைதானத்தின் பாதுகாப்பு ஊழியர்களை தாக்கினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கொல்கொத்த நைட் ரைடேர்ஸ் உரிமையாளர் ஷாருக்கான் 5 வருடத்திற்கு இந்த மைதானத்துக்குள் செல்ல முடியாதபடி மும்பை கிரிக்கெட் சம்மேளனம் அவருக்கு தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிர்வாக சபைக் கூடத்திலேயே இறுதிப் போட்டி வங்கடே மைதானத்தில் நடாத்துவதா இல்லையா என்ற முடிவு எடுக்கப்படும் என தெரிவித்த ஐ.பி.எல் தலைவர் பிஸ்வால், நிர்வாக சபை உறுப்பினர்கள் உடனடிக் கூட்டத்திற்கு பங்கு பற்றும் நிலையில் உள்ளார்களா என்பது சந்தேகம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X