2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

இங்கிலாந்து வீரர்கள் உபாதையில்; அணித் தெரிவு சிக்கல்

A.P.Mathan   / 2014 மே 15 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படும் மத் ப்ரையர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகிய இருவரும் தங்கள் உடற் தகுதியை நிரூபித்த பின்னரே அணிக்குள் வர முடியும் என்ற நிலை உள்ளது. 
 
விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான மத் ப்ரையர் சம்பியன்ஷிப் போட்டிகளின் ஆரம்ப போட்டியில் சசெக்ஸ் பிராந்திய அணிக்காக சதம் அடித்தபோதும் விக்கெட் காப்பில் ஈடுபடவில்லை. குதிக்காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக அதன் பின் போட்டிகளில் விளையாடவில்லை. அவர் தற்போது பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார். 
 
பென் ஸ்டோக்ஸ் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான இறுதி ட்வென்டி ட்வென்டி போட்டியில் விளையாடிய போது கை முறிவு ஏற்பட்டது. அதில் இருந்து குணமடைந்து வருகின்றார். இம்மாத இறுதிக்குள் அவர் குணமாகி விடுவார் என நம்பப்படுகின்றது. 
 
இவர்கள் இருவரும் குணமடையாத பட்சத்தில் வேறு வீரர்களை அணியில் சேர்க்க முடியும் என தெரிவித்துள்ள தெரிவுக்குழுத் தலைவர் ஜேம்ஸ் விடேகர் பல வீரர்கள் தங்கள் கவனத்தில் இருப்பதாகவும் அணித் தெரிவின் போது இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X