
ஐ.பி.எல் சூதட்டா சர்ச்சை விசாரணையில் இருக்கும் நிலையில், சர்வதேச ரீதியில் சூதாட்ட சர்ச்சைகளும் இப்போது வெளிவர ஆரம்பித்துள்ளன. நியூசிலாந்து முன்னாள் வீரர் லூ வின்சென்ட் பல முக்கிய கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டம் நடந்துள்ளதாகவும் அவற்றிக்கான தகவல்களை சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு வழங்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளன.
லூ வின்சன்ட் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் இங்கிலாந்து கழக மட்டப் போட்டிகளிலும், சம்பியன் லீக் போட்டிகளிலும், இன்னும் சில போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இந்திய கிரிக்கெட் சபையுடன் சம்மந்தமான சம்பியன் லீக் தொடரில் பல போட்டி நிர்ணயங்கள் நடைபெற்றுள்ளதாகவும், குறிப்பாக ஒக்லண்ட் ஆஷஸ் விளையாடிய போட்டிகள் விசாரணைக்கு உட்படுத்தபப்ட்டுள்ள அதேவேளை போட்டிகள் முழுமையாக மீள் ஆய்வு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுளளது.
நியூசிலாந்து அணியின் தற்போதைய வீரர்கள் யாரும் இதுவரை விசாரிக்கப்படவில்லை எனவும், நியூசிலாந்தில் நடைபெற்ற போட்டிகள் எதிலும் விசாரணைகள் நடைபெறவில்லை, நியூசிலாந்து அணி விளையாடிய போட்டிகள் எதுவும் விசாரிக்கபடவில்லை என நியூசிலாந்து கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி டேவிட் வைட் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானிய முன்னாள் வீரர் ஒருவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் லு வின்சென்ட் விசாரிக்கப்பட்டதாகவும், அவர் வழங்கிய தகவல்களின் படி சர்வதேசக் கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்ததாகவும் பல சர்வதேசப் போட்டிகள் மற்றும் வீரர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படும் வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.
சம்பியன் லீக் போட்டிகளும், அதில் பங்கு பற்றிய வீரர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகின்றது.