2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

நரேந்திர மோடியின் கட்டுப்பாட்டுக்குள் இந்திய கிரிக்கெட்?

A.P.Mathan   / 2014 மே 27 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை, இந்திய புதிய பிரதமர் நரேந்திர மோடியின் கடுப்பாட்டுக்குள் வர வாய்ப்புக்கள் இருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பதவிப் பிரமாண நிகழ்வுக்கு அமித் ஷா என்பவருக்கு அதி முக்கியத்துவம் வழங்கி அதிதியாக அழைக்கப்பட்டு இருந்தார். அரசியில் ரீதியாக மட்டுமன்றி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் உதவி தலைவராக அவர் வர வாய்ப்புக்கள் இருபதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. நரேந்திர மோடி, குஜராத் கிரிக்கெட் சம்மேளன தலைவராக இருந்த வேளையில் ஷா உபதலைவராக இருந்தவர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் பொதுக் கூட்டங்களுக்கு குஜராத் கிரிக்கெட் சம்மேளனத்தின் சார்பாக ஷாவே பிரதிநிதியாக கலந்து கொள்பவர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

இந்திய விளையாட்டு வீரர்கள் ராணுவ வீரர்கள் போன்று பயிற்சிகளின் போது நடாத்தப்பட வேண்டும் எனவும் அவர்களுக்கான வசதிகள் அதிகளவில் வழங்கப்பட வேண்டும் எனவும், வசதிகள் உடனடியாக அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் நரேந்திர மோடி கூறியிருந்தார். இதன்படி அவர் விளையாட்டை மேம்படுத்த முனைப்பாக இருக்கின்றார் என்பது தெளிவாகின்றது.

நீதிமன்றத்தினால் தடை செய்யப்பட்டுள்ள ஸ்ரீநிவாசன் மீண்டும் தலைவராக வர வாய்ப்புகள் இல்லை. செப்டெம்பர் மாதம் அவரின் பதவிக்காலம் நிறைவடைகின்றது. இதேவேளை இவரால் தடை செய்யப்பட்ட லலித் மோடி, பாரதியா ஜனதா கட்சியுடன் இணைந்து செயற்படும் ஒருவர். அண்மையில் ராஜஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவராக பதவியேற்றார். இருப்பினும் ராஜஸ்தான் கிரிக்கெட் சபையை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தடை செய்துள்ளது. தற்போதைய வழக்கு விசாரணைகளுக்கு முக்கிய காரணமான பீகார் கிரிக்கெட் சம்மேளன தலைவர் ஆதித்தியா வர்மா நரேந்திர மோடியின் வெற்றிக்கு வாழ்த்துக்களை கூறியிருந்தார்.

நரேந்திர மோடிக்கு ஆதரவானவர்களின் பலம் கூடியிருப்பதும், இந்தியாவின் முக்கிய அமைப்புகளில் ஒன்றா திகழ்வதுமான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையை நரேந்திர மோடி தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முனைவர் என்பதும், அண்மைக்கால சிக்கல்களை முடிவுக்கு கொண்டு வர முயற்சி எடுப்பார் என்ற அடிப்படையிலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையில் மாற்றங்கள் வர வாய்ப்புகள் உள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X