2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் பிரேசில் பயணம்

Super User   / 2014 ஜூன் 08 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

உலக கால்பந்தாட்ட சம்மேளனத்தின் அழைப்பை ஏற்று  இலங்கை  கால்பந்தாட்ட சம்மேளன பொருளாளரும், புத்தளம் கால்பந்தாட்ட லீக் செயலாளருமான ஜே.எம்.ஜௌசி இம்மாதம் ஆரம்கமாகவுள்ள உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரின் ஆரம்ப நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக  ஞாயிற்றுக்கிழமை (08) பிரேசில் பயணமானார்.

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன உயர் அதிகாரிகளுடன் பயணமாகும்  ஜே.எம்.ஜௌசி 09ஆம் திகதி நடைபெறவுள்ள ஆசிய கால்பந்தாட்ட சம்மேளன பொதுக்கூட்டத்திலும், 10ஆம் திகதி நடைபெறவுள்ள உலக  கால்பந்தாட்ட சம்மேளன பொதுக்கூட்டத்திலும் கலந்து கொள்ள உள்ளார்.

12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள  உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரின் ஆரம்ப நிகழ்வுகளிலும் ஜே.எம்.ஜௌசி கலந்து  கொள்ளவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X