2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

இரண்டாவது சர்வதேசக் கிரிக்கெட் சபை???

Super User   / 2014 ஜூன் 09 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை இரண்டாவது சர்வதேசக் கிரிக்கெட் சபையை உருவாக்கும் என அதன் செயலாளர் சஞ்சய் பட்டேல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்தே இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
சர்வதேசக் கிரிக்கெட் சபையில் தங்களுக்குரிய முக்கியத்துவம் வழங்கப்படாவிட்டால்  இந்த நடவடிக்கைக்கு தாங்கள் செல்ல வேண்டி வரும் எனவும் தங்கள் கிரிக்கெட் சபைக்கு சர்வதேசக் கிரிக்கெட் சபை வழங்க வேண்டிய மிகுதி பணத் தொகையையும் வழங்காவிட்டால் தாங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி யோசிக்கவேண்டி வரும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து சபைகள் ஜூன் மாதம் 27 ஆம் திகதி முதல் புதிய சபையினை உருவாக்க சம்மதம் தெரிவித்துள்ளது. அதன் படி ஸ்ரீனிவாசனின் தலைமையில் அந்த மாற்றம் நடக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஸ்ரீநிவாசன் சர்வதேசக் கிரிக்கெட் சபையின் தலைவராக பதவியேற்பதை யாரும் தடுக்க முடியாது என தெரிவித்த அவர் உயர் நீதிமன்றம் அவர் சர்வதேசக் கிரிக்கெட் சபையின் தலைவராக பதவியேற்பதற்கு தடை விதிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

அனைத்து கிரிக்கெட் சபைகளுடனும் தானும் ஸ்ரீனிவாசனும் பேச்சுவார்த்தைகளை நடாத்தி இருப்பதாகவும், தங்கள் மாற்றத்திற்கு அனைவரும் சம்மதம் தெரிவித்து உள்ளதாகவும் அவர் கூறிய அதேவேளை சர்வதேசக் கிரிக்கெட் சபையின் வருமானத்தில் 68 தொடக்கம் 72 சதவீதம் இந்திய கிரிக்கெட் சபை மூலம் கிடைக்கின்றது, எனவே எமாக்கான முக்கியத்துவம்  வழங்கப்படுவது கட்டாயம் எனவும் அவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .