2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

இரண்டாவது ஐ.சி.சி உருவாக்கப்படுமென்பது நகைப்புக்குரியது: எஷான்மணி

Kanagaraj   / 2014 ஜூன் 11 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டாவது சர்வதேச கிரிக்கெட் சபை உருவாக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக, இந்தியக்கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் செயலாளர் சஞ்சய்பட்டேல் அறிவித்தது நகைப்புக்கு உரியது என சர்வதேச கிரிக்கெட்சபையின் முன்னாள் தலைவர் எஷான்மணி தெரிவித்துள்ளார்.

இந்தியக்கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை நினைத்த உடன் அவற்றை செய்ய முடியாது.வீரர்கள் கிரிக்கெட் சபைகளுடன் ஒப்பந்தங்களில் உள்ளனர். அவர்களை முழுமையாக மாற்ற முடியாது.

இதில் பல சிக்கல்கள் இருக்கின்றன என தெரிவித்த அவர், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் சபைகள் இந்த எச்சரிக்கைகளை பார்த்து பதட்டப்பட தேவையில்லை எனவும்அவர்கூறியுள்ளார்.

தன்னுடைய பதவிக்காலத்திலும் ஒரு நாட்டின் கிரிக்கெட் சபை, சர்வதேச கிரிக்கெட் சபையின் நிகழ்வில் பங்குபற்ற எதிர்ப்பு தெரிவித்தது, ஆனாலும் மற்றைய சபைகள் ஒன்று சேர்ந்து நின்றன. அவர்களுக்கு எதிரான திட்டங்கள் பற்றி அறிந்ததும் அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து கொண்டார்கள் எனவும் எஷான்மணி தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X