2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

உலகக்கிண்ண கால்ப்பந்தாட்டம் இன்று

Menaka Mookandi   / 2014 ஜூன் 12 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகில் அதிகமானவர்கள் பார்க்கும் விளையாட்டு என வர்ணிக்கப்படும் கால்பந்தாட்டத்தின் உலகக்கிண்ணத் தொடர் இன்று ஆரம்பிக்கவுள்ளது.

இது இருபதாவது உலகக்கிண்ண கால்ப்பந்தாட்ட தொடராகும். கால்ப்பந்தாட்டத்தின் முடி சூடா மன்னராகத் திகழும் பிரேசில், இரண்டாவது தடவையாகவும்  உலகக்கிண்ணத் தொடரை நடத்துகின்றது.

 32 அணிகள் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் நான்கு அணிகள் வீதம் தமக்குள் மோதி குழுக்களில் முதலிரு இடங்களைப் பெறும் அணிகள் அடுத்த சுற்றுக்கு தெரிவாகும்.

ஜூலை 13 ஆம் திகதி இறுதிப் போட்டி நடைபெறும். மொத்தமாக 64 போட்டிகள் இடம்பெறவுள்ளன. வெற்றி பெறும் அணிக்கு கிண்ணத்துடன் கிட்டத்தட்ட 450 கோடி ரூபா பணப் பரிசும் வழங்கப்படும்.

முதற்போட்டியில் மோதும் பிரேசில் மற்றும் குரேசியா அணிகளுக்கு இடையிலான போட்டி, இலங்கை நேரப்படி 13ஆம் திகதி அதிகாலை 1.30இற்கு ஆரம்பிக்கவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X