2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

உலக கிண்ண கால்பந்தாட்டம்: பிரேசிலுக்கு முதல் வெற்றி

A.P.Mathan   / 2014 ஜூன் 13 , மு.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடர் மிகப் பிரமாண்டமான ரீதியில் ஆரம்பமாகியுள்ளது. பிரேசில், ஷோ போலோ, அரீனா மைதானத்தில் ஆரம்பமானது. முதல் போட்டியில் பிரேசில் அணியானது குரேசியா அணியை 3 இற்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டது. 
 
இந்தப் போட்டியில் முதல் கோலை குரேசியா அணி 11ஆவது நிமிடத்தில் பெற்றது. இந்த கோல் பிரேசில் வீரர் மார்சலோவினால் சொந்த கோலாக அடிக்கப்பட்டது. 29ஆவது நிமிடத்தில் இம்முறை உலகக்கிண்ண தொடரின் நாயகனாக பிரகாசிப்பார் என எதிர்பார்க்கப்படும் நைமர் அடித்த கோல் மூலமாக பிரேசில் அணி முதல் பாதியை சமநிலையில் நிறைவு செய்தது. 
 
71ஆவது நிமிடத்தில் நைமர் அடித்த பனால்டி கோல், பிரேசில் அணிக்கு முன்னிலையை கொடுத்தது. 90ஆவது நிமிடத்தில் ஒஸ்கார் மூன்றாவது கோலை அடித்தார். போட்டியின் நாயகனாக பிரேசில் வீரர் நைமர் தெரிவு செய்யப்பட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .