2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

உலகக் கிண்ணம் ஆறாவது நாள் முடிவுகள்

A.P.Mathan   / 2014 ஜூன் 18 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் ஆறாவது நாள் போட்டிகளில் முதற்ப் போட்டி பெல்ஜியம், அல்ஜீரியா அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பெல்ஜியம் அணி 2 இற்கு 1 என்ற ரீதியில் வெற்றி பெற்றது. அல்ஜீரியா அணி 24ஆவது நிமிடத்தில் பனால்டி உதை மூலம் முதல் கோலைப் பெற்றது. சொபியேன் போகைல் அந்த கோலை அடித்தார். பெல்ஜியம் அணி சார்பாக 70ஆவது மற்றும் 80ஆவது நிமிடங்களில் மரோனி பெலொனி மற்றும் ட்ரீஸ் மேற்றன்ஸ் ஆகியோர் கோல்களை அடித்தனர். போட்டியின் நாயகனாக பெல்ஜியம் வீரர் கெவின் டி ப்ரூனே தெரிவு செய்யப்பட்டார். 
 
இரண்டாவது போட்டி பிரேசில் - மெக்சிகோ அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இந்தப் போட்டி கோல்கள் அற்ற சமநிலை முடிவை வழங்கியது. இரு அணிகளும் தங்களது முதற்ப் போட்டியில் வெற்றி பெற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது. மெக்சிகோ கோல் காப்பாளர் கிலர்மோ ஒச்சோ போட்டியின் நாயகனாக தெரிவு செய்யப்பட்டார். 
 
மூன்றாவது போட்டி ரஷ்யா - வட கொரியா அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இரு அணிகளும் ஒவ்வொரு கோல்களை அடித்து போட்டியை சமநிலையில் நிறைவுசெய்தன. கீயுன் கோ லீ 68ஆவது நிமிடத்தில் வட கொரியா அணிக்கான கோலை அடித்தார். அலக்சாண்டர் கெரசாகொவ் 74ஆவது நிமிடத்தில் ரஷ்யா அணியின் கோலை அடித்தார். வட கொரியா வீரர் சண் கியுங்க்மின் போட்டியின் நாயகனாக தெரிவானார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X