2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

இலங்கை, தென் ஆபிரிக்க ஒருநாள் போட்டி இன்று

A.P.Mathan   / 2014 ஜூலை 06 , மு.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. மூன்று போட்டிகள் அடங்கிய தொடரின் முதலாவது போட்டி காலை 9.45 இற்கு கொழும்பு R.பிரேமதாசா மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. 
 
இலங்கை, தென் ஆபிரிக்கா அணிகளுக்கிடையில் இலங்கையில் நடைபெற்றுள்ள 16 போட்டிகளில் 13 போட்டிகளில் இலங்கை அணியும், 2 போட்டிகளில் தென் ஆபிரிக்கா அணியும் வெற்றி பெற்றுள்ள அதேவேளை, 2 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்த்துள்ளன. தென் ஆபிரிக்கா அணி தொடர் எதனையும் இலங்கையில் வைத்து கைப்பற்றியதில்லை. 
 
இந்தப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றால் தரப்படுத்தல்களில் இரண்டாமிடத்திற்கு முன்னேறும். தென் ஆபிரிக்கா அணி வெற்றி பெற்றால் இலங்கை அணி மூன்றாமிடத்திலும், தென் ஆபிரிக்கா அணி நான்கமிடத்திலும் தொடரும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .