2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

இந்தியா, இங்கிலாந்து நான்காம் நாள் இன்று

A.P.Mathan   / 2014 ஜூலை 20 , மு.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியும் நான்காம் நாள் இன்றாகும். தமது இரண்டவாது இன்னிங்சிற்காக துடுப்பாடி வரும் இந்தியா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 169 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இதில் முரளி விஜய் ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்களுடனும், டோனி ஆட்டமிழக்காமல் 12 ஓட்டங்களுடன் ஆடுகளத்தில் உள்ளனர். நல்ல ஆரம்பத்தை இந்தியா அணி எடுத்த போதும் 5 ஓட்டங்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து இறுக்கமான நிலையை அடைந்துள்ளது. செட்டேஸ்வர் புஜாரா 43 ஓட்டங்களையும், சிகார் தவான் 31 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் லியாம் பிளங்கட் இரண்டு விக்கெட்களைக் கைபற்றினர். 
 
இந்தியா அணி தமது முதலாவது இன்னிங்சில் 295 ஓட்டங்களைப் பெற்றது. இதில் அஜிங்கையா ரெஹானே 103 ஓட்டங்களையும், புவனேஸ்வர் குமார் 36 ஓட்டங்களையும் பெற்றனர். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் ஜேம்ஸ் அன்டர்சன் 4 விக்கெட்களையும், ஸ்டுவோர்ட் ப்ரோட் , பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்சில் 319 ஓட்டங்களைப் பெற்றது. கரி பலன்ஸ் 119 ஓட்டங்களையும், லியாம் பிளங்கட் ஆட்டமிழக்காமல் 55 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார் 6 விக்கெட்களைக் கைப்பற்றினர். ரவீந்தர் ஜடேஜா 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 
 
முடிவு ஒன்றை நோக்கி நகரும் இந்தப் போட்டியில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. இரண்டாவாது இன்னிங்சில் இந்தியா அணி 300 ஓட்டங்களை தாண்டும் பட்சத்தில் இந்தியா அணிக்கு வெற்றி பெறும் வாய்ப்புக்கள் கிடைக்கும் அதேவேளை வெற்றி இலக்கு 300 ஓட்டங்களுக்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் இங்கிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பகளும் உள்ளன. இன்றைய நாள் இந்தப் போட்டியின் முக்கிய நாளாக அமையவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X