2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்: முதல் நாள்

A.P.Mathan   / 2014 ஜூலை 27 , பி.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இங்கிலாந்து அணி சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடி வரும் இங்கிலாந்து அணி 90 ஓவர்களை சந்தித்து 2 விக்கெட்களை இழந்து 247 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இதில் கரி பலன்ஸ் ஆட்டமிழக்காமல் 104 ஓட்டங்களையும், அலஸ்டயர் குக் 95 ஓட்டங்களையும் பெற்றனர். இவர்கள் இருவரினது இணைப்பாட்டம் 158 ஓட்டங்களை இரண்டாவது விக்கெட்டிற்காக வழங்கியது. 
 
இந்தியா அணியின் பந்துவீச்சில் மொஹமட் சமி, ரவீந்தர் ஜடேஜா ஆகியோர்  தலா ஒவ்வொரு விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளனர். இங்கிலாந்து, சொவ்தம்ப்டன் ரோஸ்போல் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்று வருகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X