2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

பெங்கால் சம்மேளன இணைச் செயலாளராக கங்குலி

A.P.Mathan   / 2014 ஜூலை 27 , பி.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலி, பெங்கால் கிரிக்கெட் சம்மேளனத்தின் இணைச் செயலாளராக போட்டி இன்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார். 
 
பெங்கால் கிரிக்கெட் சம்மேளனத்தின் 83ஆவது வருடாந்தப் பொதுக் கூட்டத்திலேயே அவர் தெரிவு செய்யப்பட்டார். தான் தன்னால் இயன்ற சிறந்த பணியை வழங்குவேன் எனக் சௌரவ் கங்குலி கூறியுள்ளார். நான் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவராக இருந்த வேளையில் கங்குலி அணியின் தலைவராக இருந்தார். அணியாக சிறந்து செயற்பட்டோம். இப்போது மீண்டும் இணைந்துள்ளோம். மீண்டும் சிறப்பாக செயற்படுவோம் என போட்டி இன்றி தலைவராக தெரிவு செய்யப்பட்ட ஜக் மோகன் டால்மியா தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .