2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

அணியில் இருந்து சுரங்க லக்மால் விலகினார்

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 04 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மால் பாகிஸ்தான் தொடரில் இருந்து விலகியுள்ளார். தென் ஆபிரிக்கா அணியுடன் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட உபாதை குணமடையாத நிலையில் அவர் அணியில் இருந்து விலகியுள்ளார். இடது கணுக்காலில் ஏற்பட்ட உபாதையே அவர் விளையாட முடியாத நிலையை உருவாக்கியுள்ளது. 
 
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் உபாதையடைந்து இருந்த சமின்ட எரங்க குனமடைந்துள்ளார். அவர் முதற்போட்டியில் விளையாடுவார் என நம்பப்படுகின்றது. இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் மைக்கல் டி சில்வா சுரங்க லக்மாலின் இடத்திற்கான மாற்று வீரர் மிக விரைவில் அறிவிக்கப்படுவார் என கூறியுள்ளார். 
 
நாளை மறுதினம் இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பிக்கவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X