2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

ஜடேஜா- அன்டர்சன் மோதல்: இந்தியா ஐ.சி.சிக்கு அழுத்தம்

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 05 , பி.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய வீரர் ரவீந்தர் ஜடேஜா, இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் அன்டர்சன் ஆகியோரின் மோதலின் முடிவு தொடர்பில் சர்வதேசக் கிரிக்கெட் பேரவையை மீள் முறையீடு செய்யுமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை கோரியுள்ளது. குறித்த வீரர்களின் பிரச்சினையை விசாரித்த சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் நீதிக்குழுவின் பணிப்பாளர் கோர்டன் லூயிஸ் போதிய ஆதாரங்கள் இல்லாத நிலையில் இரு வீரர்களும் குற்றம் அற்றவற்றவர்கள் எனக் கூறி தீர்ப்பை வழங்கி இருந்தார். ஆனாலும் இந்த தீர்ப்பு இந்திய அணிக்கு எதிராகவே அமைந்துள்ளது. குறித்த தீர்ப்புக்கான மீள் முறையீட்டை இந்திய அணி செய்ய முடியாது. மீள் முறையீடு செய்வதற்க்கான அதிகாரம் சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி டேவிட் ரிச்சட்சனுக்கு மாத்திரமே உள்ளது. 
 
அவருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை கடிதம் அனுப்பியுள்ளதை உறுதி செய்துள்ள சர்வதேசக் கிரிக்கெட் பேரவை 10 ஆம் திகதி இது பற்றி இறுதி முடிவு எடுக்கபப்டும் எனக் கூறியுள்ளது. 
 
சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் விதிகளின் படி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை மீள் முறையீடு செய்ய முடியாது. ஆனால் சர்வதேசக் கிரிக்கெட் பேரவை அந்த அதிகாரத்தை கொண்டுள்ளது. 
 
நேற்று இரவு சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு இந்த விசாரணையில் தவற விடப்பட்ட விபரங்களை முழுமையாக விளக்கி கடிதம் எழுதியுள்ளேன். இந்த தீர்ப்பில் எமக்கு திருப்பதி இல்லை. விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை எனவும் அதில் குறிப்பிட்டுள்ளேன் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் சஞ்சய் பட்டேல் ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .