.jpg)
இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் ஒரு நாள் சர்வதேசப் போட்டிக்கான அணி அறிவிக்காப்பட்டுள்ளது. அணித் தலைவர் டோனியின் இடத்தை மீள் நிரப்புகை செய்வார் என எதிர்பார்க்கப்படும் சஞ்சு சம்சன் முதற் தடவையாக இந்திய அணியில் இணைக்கப்பட்டுள்ளார். ஐ.பி.எல் போட்டிகளில் சிறப்பான அதிரடியான துடுப்பாட்டத்தை வெளிக்காட்டிய இவர் அண்மையில் ஆஸ்திரேலியாவில் நிறைவடைந்த A அணிகளுக்கான தொடரில் சிறப்பாக ஓட்டங்களைப் பெற்றவர் ஆவார். 19 வயதான சஞ்சு சம்சன் 19 வயதுக்குட்ப்பட்ட இந்திய உலகக்கிண்ண அணியிலும் மிகச் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிக்காட்டி இருந்தார். இவருடைய விக்கெட் காப்பு சர்வதேச தரத்தில் மிகச் சிறப்பாக உள்ளமை எதிர்காலத்தில் அணியில் நிச்சய இடத்தை வழங்கும்.
இதேவேளை சகலதுறை வீரரான கர்ன் ஷர்மாவும் முதற் தடவையாக அணியில் இடம் பிடித்துள்ளார். டவல் குல்கர்னி ஒரு வருடத்திற்கு பின்னர் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார். உபாதை காரணமாக அமித் மிஸ்ரா அணியில்\சேர்த்துக் கொள்ளபப்டவில்லை. ஆசியக் கிண்ணப் போட்டிகளில் அணியில் இருந்து நீக்கபப்ட்ட சுரேஷ் ரெய்னா , பங்களாதேஷ் தொடருக்கு தலைமை தாங்கி இருந்தார். அவரும் அணியில் இடம் பிடித்துள்ளார். இந்த மாற்றங்களை தவிர வழமையான இந்தியா அணியின் வீரர்கள் தங்கள் இடங்களை தக்க வைத்துள்ளனர்.
அணி விபரம்
டோனி, விராத் கோலி, ஷிகார் தவான், ரோஹித் ஷர்மா, அஜிங்கையா ரெஹானே, சுரேஷ் ரெய்னா, ரவீந்தர் ஜடேஜா, அஷ்வின், ஸ்டுவோர்ட் பின்னி, புவனேஷ்வர் குமார், மொஹமட் சமி, மோஹித் ஷர்மா, அம்பாத்தி ராயுடு, உமேஷ் யாதவ், டவல் குல்கர்னி, சஞ்சு சமசன், கர்ன் ஷர்மா.