
கிரிக்கெட்டில் தவறான வார்த்தை பிரயோகங்கள் சரியானது என்ற முடிவை சர்வதேசக் கிரிக்கெட் பேரவை வழங்கியுள்ளது என்ற அதிருப்தியான கருத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ரவீந்தர் ஜடேஜா, ஜேம்ஸ் அன்டர்சனின் மோதலின் இறுதி தீர்ப்பு இப்படியான ஒரு தகவலையே வழங்கியுள்ளது என அவர் கூறியுள்ளார்.
போட்டி நடுவர் ப்ரூஸ் ஒக்ஸ்பன்போர்ட் இன் அறிக்கையின் படி ஜேம்ஸ் அன்டர்சன் மோசமான தகாத வார்த்தை பிரயோகத்தை பாவித்துள்ளார் என்பது தெரிகிறது. ஆனால் அந்த மோசமான வார்த்தைப் பிரயோகத்தைப் பற்றி யாரும் பெரிதுபடுத்தவில்லை. அவர் ஏதோ கூறினார். ஜடேஜா ஆக்ரோஷமாக பார்த்தார். தன்னை பாதுகாக்க அன்டேர்சன் அவரை தள்ளி விட்டார். இவை தீர்ப்பின் படி சரி என்றாலும் வார்த்தைப் பிரயோகம் என்பதற்கு தண்டனை வழங்கப்பட்டு இருக்க வேண்டும் என ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.
சிலர் இதை விட்டு நகருங்கள் என்று கூறுகின்றனர். இங்கே இவர்கள் இரண்டு வார்தைகளுக்கிடையிலான வித்தியாசத்தை உணரவில்லை. சிலெஜிங்க் வேறு அபியூஸ் வேறு என்பதை புரிந்து கொள்ளவில்லை. வீரர்களை வெறுப்பேற்ற செய்வது சிலெஜிங்க். ஒரு வீரரை மோசமான வார்த்தைகளால் திட்டுவது அபியூஸ். ஜேம்ஸ் அன்டேர்சன் செய்தது இரண்டாவது ரகம். இதை விட்டு விலக முடியாது. அவர் எல்லையை இங்கே தாண்டி விட்டார். காட்டாயம் தண்டிக்கப்பட்டு இருக்க வேண்டும் என ராகுல் டிராவிட் மேலும் கூறியுள்ளார்.