
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஓர் இன்னிங்ஸ் மற்றும் ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி தொடரில் 2 இற்கு 1 என்ற ரீதியில் முன்னிலை பெற்றுள்ளது.
தமது முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி சகல விக்கெட்களையும் இழந்து இழப்பிற்கு 367 ஓட்டங்களைப் பெற்றது. இதில் இயன் பெல் 58 ஓட்டங்களைப் பெற்ற அதேவேளை ஜோ ரூட் 77 ஓட்டங்களையும், ஜோஸ் பட்லர் 70 ஓட்டங்களையும் பெற்றனர். 155 ஒட்டங்களை 7ஆவது விக்கெட்டிற்காக ஜோஸ் பட்லர்,ஜோ ரூட்ஆகியோர் பகிர்ந்து கொண்டனர். இந்திய அணியின் பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார், வருண் ஆரோன் ஆகியோர் தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றினர். பங்கஜ் சிங் 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.
இந்தியா அணி தமது இரண்டாம் இன்னிங்சில் 161 ஓட்டங்களைப் பெற்றனர். இதில் அஷ்வின் ஆட்டமிழக்காமல் 46 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் மூயேன் அலி 4 விக்கெட்களையும், ஜேம்ஸ் அன்டேர்சன், க்றிஸ் ஜோர்டான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றினர்.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 152 ஓட்டங்களுக்கு சகல விக்கட்களையும் இழக்க செய்தது. அணித்தலைவர் டோனி 71 ஓட்டங்களையும் அஷ்வின் 40 ஓட்டங்களையும், அஜின்கையா ரெஹானே 24 ஓட்டங்களையும் பெற்றனர். 6 வீரர்கள் ஓட்டம் எதையும் பெறாமல் ஆட்டமிழந்தனர். பந்துவீச்சில் ஸ்டுவோர்ட் ப்ரோட் 6 விக்கெட்களையும், ஜேம்ஸ் அன்டேர்சன் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இந்தப் போட்டியின் நாயகனாக ஸ்டுவோர்ட் ப்ரோட் தெரிவு செய்யப்பட்டார். இரண்டாவது போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்று முன்னிலையில் இருந்த போதும் அடுத்த இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. அடுத்த போட்டி இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டியாக அமையவுள்ளது. வெற்றி பெற்றால் மாத்திரமே தொடரை சமநிலையில் நிறைவு செய்ய முடியும் என்ற நிலை உள்ளது.