2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

இலங்கை கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் விண்ணப்பதாரிகள்

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 11 , மு.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவிக்கான விண்ணப்ப இறுதி நாள் நேற்று ஆகும். தலைமைப் பயிற்றுவிப்பாளர், களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர், அணி உடல் இயக்க பயிற்றுவிப்பாளர் ஆகியோருக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு இருந்தன. 
 
தலைமைப் பயிற்றுவிப்பாளருக்கான பதவிக்கு 13 பேர் விண்ணப்பித்துள்ளனர். இலங்கை சார்ந்த எவரும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை. மார்வன் அத்தப்பத்துக்கு குறித்த பதவி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்புக்கள் அதிகம் இருந்தன. ஆனால் அவர் குறித்த பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை. இதை இலங்கை கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா உறுதி செய்துள்ளார். 
 
தென் ஆபிரிக்காவுடன் சம்மந்தப்பட்ட ஐந்து பேர் இந்தப் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர். தென் ஆபிரிக்காவின் முன்னாள் பயிற்றுவிப்பாளர்கள் மைக்கி ஆதூர், ரே ஜென்னிங்ஸ், எரிக் சிம்மொன்ஸ்,  தென் ஆபிரிக்காவின் சகலதுறை வீரர் லான்ஸ் குளுஸ்னர் ஆகியோருடன் இங்கிலாந்து தொடரில் இலங்கை அணிக்கு ஆலோசராக செயற்பட்ட க்றிஸ் அடம்ஸ், அவுஸ்திரேலியா அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளர் கிரேக் மக்டெமொட், இலங்கை அணியின் உறுதி மற்றும் அதை பேணும் பயிற்சிகளை வழங்கிய அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஷேன் டப், தென் ஆபிரிக்காவின் திறமைக்கான பணிப்பாளர் பட்டி அப்டன், முன்னாள் இந்திய சுழல்ப் பந்துவீச்சாளர் ஆஷிஸ் கபூர், நியூசிலாந்து முன்னாள் பயிற்றுவிப்பாளரும், ஆப்கானிஸ்தான் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளருமான அன்டி மோல்ஸ், இங்கிலாந்து முன்னாள் வீரர் மல் லோயி, விக்டோரியா கழகத்தின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் சிமொன் ஹெல்மொட், சமொசெட் கழகத்தின் கிரிக்கெட் பணிப்பாளர் டேவ் நொஸ்வேர்த்தி ஆகியோர் விண்ணப்பித்த 13 பேரும் ஆவர். 
 
களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் பதவிக்கு மனோஜ் அபயவிக்கிரம என்பவர் இலங்கை சார்பாக விண்ணப்பித்துள்ளார். மற்றவர்கள் 11 பேரும் வெளிநாட்டவர்கள். இலங்கையர்கள் குறித்த பதவிகளுக்கு விண்ணப்பிக்காமை இலங்கை கிரிக்கெட் வெளிநாட்டு பயிற்றுவிப்பாளர் ஒருவரை நோக்கி செல்லும் என்ற சந்தேகத்தை உருவாகியுள்ளது. விண்ணப்பித்துள்ளவர்களில் சிலர் பயிற்றுவிப்பாளர் பதவிகளைப் பெற்றுக் கொள்ளும் அதேவேளை ஓரிருவர் ஆலோசகர் பதவிகளையும் பெற்றுக் கொள்வார்கள் என இலங்கை கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா கூறியுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X