2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

அஜ்மல், பந்தை வீசி எறிவதாக குற்றச்சாட்டு

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 11 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் சைட் அஜ்மல், பந்தை வீசி எறிகின்றார் என முறையீடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் சில பந்துவீச்சுக்கள் சந்தேகத்துக்கு உரியனவையாக உள்ளதாக போட்டியின் நடுவர்கள் முறையீடு செய்துள்ளனர். இதன்படி அடுத்த 21 நாட்களுக்குள் சைட் அஜ்மல் பரிசோதனை மூலம் தன்னை நிரூபித்துக் காட்ட வேண்டும். 2009ஆம் ஆண்டு இதுபோன்று முறையீடு செய்யப்பட்டு அவரின் பந்துவீச்சு சரியாக உள்ளதாக பரிசோதனை மூலம் நிரூபிக்கப்பட்டது. 
 
சர்வதேசக் கிரிக்கெட் சபையின் அறிக்கை தமக்கு கிடைத்துள்ளதை உறுதி செய்துள்ள பாகிஸ்தான் அணி முகாமையாளர் மொய்ன் கான் தாம் இது தொடர்பாக பெரிதாக எடுக்கவில்லை எனவும் இது ஒரு சாதாரண நடை முறை எனவும் கூறியுள்ள அதேவேளை இரண்டாவது போட்டியில் எந்த சலசலப்புகளும் இன்றி வழமை போன்றே அஜ்மல் விளையாடுவார் என மேலும் மொய்ன் கான் கூறியுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X